செஸ் ஒலிம்பியாட் : பிரெய்லி முறையில் விளையாடும் போர்ட்டோ ரிக்கா  நாட்டு வீராங்கனை

Must read

மாமல்லபுரம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் போர்ட்டோ ரிக்கா நாட்டு வீராங்கனை நடாஷா பிரெயிலி முறையில் விளையாடுகிறார்.

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் வீரர்கள் குவிந்துள்ளனர்.  இதில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள போர்ட்டோ ரிக்கா வீராங்கனை நடாஷா மோர்ல்ஸ் சாண்டோஸ் என்[அவரும் ஒருவர் ஆவார்.

தற்போது 24 வயதாகும் நடாஷா முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான குல்ருக்பெகிம் டோகிர் ஜோனோவாவிடம் தோல்வியடைந்து அடுத்த சுற்றில் கேப் வெர்டே வீராங்கனையான ஸ்பினோலா திவானியாவை தோற்கடித்தார். பிறகு 3வது சுற்றில் பின்லாந்தின் நசரோவாவிடம் தோல்வியடைந்தார். ஆனால் நேற்று 4-வது சுற்றில் டிரினிடாட் & டொபாகோவின் லா ஃப்ளூர் ஜாராவுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

வீராங்கனை நடாஷாவுக்கு 12-வது வயதில்தான் செஸ் விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. இதன் பின்னர் விரைவாக முன்னேற்றம் காணத் தொடங்கிய நடாஷா 1,924 ரேட்டிங் புள்ளிகளைக் குவித்து அணியில் உள்ள மற்ற வீராங்கனைகளை விட முதலிடத்தில் உள்ளார்.

இவரால் இடது கண்ணால் இறவியில் இருன்ஹ்டே பார்க்க முடியாது.  அவரது வலது கன்ண் 25% பார்வடித்திறன் மட்டுமே கொண்டதாகும்.  எனவே இவர் தனது நகர்வுகளைப் பார்வைக் குறைபாடு உள்ளோர் பயன்படுத்தும் பிரெயிலி சதுரங்க[[அலகை மூலம் செய்கிறார்.  எதிரணி வீராங்கனைக்கு அதை தெரிவ்க்க ஒரு உதவியாளர் இருப்பார்.  அவர் எத்திரணி வீராங்கனையின் நகர்வுகளை இவருக்குத் தெரிவிப்பார்.  நடாஷா அதற்கேற்ப அடுத்த நகர்வை செய்வார்.

More articles

Latest article