சென்னை:
சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நிறைவு விழா, இன்று நடக்கிறது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழா, ஜூலை 28ல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளார். \ இதையொட்டி, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel