இன்று துணை ஜனாதிபதி தேர்தல்

Must read

புதுடெல்லி:
ன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

இந்த தேர்திலில் வெற்றி பெறுபவர், நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக வரும் 11ம் தேதி பதவியேற்பார்.

More articles

Latest article