சென்ன‍ை: ஆன்லைன் முறையில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் அண்ட் பிளிட்ஜ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணா 8வது இடம்பிடித்து தோல்வியடைந்தார்.

இப்போட்டியில், உலகச் சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட மொத்தம் 10 வீரர்கள் மோதினர்.

இரண்டாவது நாளில், பிளிட்ஜ் முறையில் மொத்தம் 9 சுற்றுகள் நடந்தன. இவற்றில், ஹரிகிருஷ்ணா, சீனாவின் ஜெப்ரிக்கு எதிராக மட்டுமே வென்றார்.

இவர், மொத்தம் 4 சுற்றுகளை டிரா செய்தார். அதற்கடுத்து, 4 சுற்றுகளில் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து, மொத்தம் 27 சுற்றுகளின் முடிவில், 15.5 புள்ளிகளைப் ப‍ெற்ற ஹரிகிருஷ்ணாவுக்கு 8வது இடமே கிடைத்தது. மொத்தம் 24.0 புள்ளிகளைப் பெற்ற அமெரிக்காவின் வெஸ்லே, முதலிடம் பெற்றார்.