‘திருமணம்’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் சேரன் பற்றி செய்தியே இல்லாமல் போனது .

சேரனுக்கு இருந்த பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், விஜய் சேதுபதி நடிப்பதற்குத் தானாகத் தேதிகள் வழங்கினார். இதன் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கூறியிருந்தார் .

பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் போகச் சொன்னது கூட விஜய் சேதுபதிதான் எனவும் சேரன் பலமுறை கூறியுள்ளார் .ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் சேரனிடம் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை புகழ்ந்து ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார் . அதற்கு பதிலளித்த சேரன் ” ‘தவமாய் தவமிருந்து’ போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியுடன் இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்கப் போகும் படம். வழி விடுமா காலம்” என்று பதிவிட்டுள்ளார்.