திருச்சி,

செக் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திருச்சி துறையூர் நீதிமன்றம் பிடிவாரன்டு பிறப்பித்துள்ளது.

பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த பவர்ஸ்டார் சீனிவாசன்மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே: ரூ.10 கோடி பணமோசடி வழக்கில் டில்லி போலீசார் பவர் ஸ்டாரை கடந்த மார்ச் மாதம் கைது செய்து அழைத்துச்சென்றனர். தற்போது ஜாமினில் இருக்கும் அவருக்கு, திருச்சி துறையூர் கோர்ட்டு பிடிவாரன்டு பிறப்பித்துள்ளது.

 

வரதராஜன் என்பவரிடம் ரூ.30 லட்சம் மதிப்பில் செக் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன்  நேரில் ஆஜராகாததால் துறையூர் நீதிமன்றம் பிடிவாரன்டு பிறப்பித்தது.