சென்னை: சென்னையில் அடையாளங்களில் ஒன்றான வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் விடைபெற்றது..
ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம், சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றாகும், தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் இடிக்கும் பணியில் உள்ளது.
வளர்ந்து விஞ்ஞான வளர்ச்சியின் பயனமாக மக்கள் ஆடம்பர திரையரங்குகளை நாடி சென்றால், போதிய கூட்டம் இல்லாததாலும், கோவிட் தொற்றுநோய் காலத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், கடந்த 2020ம் ஆண்டு திரையரங்கம் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்த ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இடிக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது.
வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி, 1979-ல் நிறுவப்பட்ட இந்தத் திரையரங்கம், பல ஆண்டுகளாக குறைந்த டிக்கெட் விலைக்கு குடும்பங்கள் மற்றும் ஏழைகளுக்கு மலிவான சினிமா அனுபவத்தை வழங்கியது. கொரோனா காலக்கட்டத்தில் மூடப்பட்ட இந்த திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. 2025 செப்டம்பர் 25-ம் தேதி இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 1970-களில் தொடங்கப்பட்ட திரையரங்கம் ஏவிஎம் ராஜேஸ்வரி. பெருமை வாய்ந்த ஏவிம் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இந்த திரையரங்கத்தையும் நடத்தியது. ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அருகிலேயே வடபழனி சாலையில் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது. வடபழனி பகுதிகளில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற திரையரங்கமாக ஏவிஎம் ராஜேஸ்வரி இருந்துவந்தது.திரையரங்குக்குள் விற்கப்படும் உணவுப் பொருள்களும், குறைந்த விலைக்கே விற்கப்பட்டன. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி, கொரோனா பேரழிவு போன்றவற்றால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதால், ஏவிஎம் திரையரங்கம்நிரந்தரமாக மூடப்படுவதாக 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்போது, ஏவிஎம் தரப்பில் கூறியபோது, , ‘கடந்த சில ஆண்டுகளாக எதிா்பாா்த்த கூட்டம் வரவே இல்லை. 20 முதல் 30 போ் மட்டுமே படம் பாா்க்க வந்தாா்கள். ஒரு படம் வெளியான அன்று நல்ல கூட்டம் இருக்கும். அடுத்த நாள் கூட்டமே இருக்காது. இதனால் கையிலிருந்து தான் பணம் போட்டு, திரையரங்கம் நடத்தப்பட்டு வந்தது.
கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்குகள் எப்படிச் செயல்படும் என்ற அச்சத்தால் மூடப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையல்ல. மாா்ச் மாதம் முதலே, திரையரங்கம் மூடப்படுவது உறுதியாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் கொரோனா அச்சுறுத்தலே தொடங்கியது. பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த திரையரங்கம் மூடப்பட்டது எங்களுக்கே வருத்தம்தான்’ என்று தெரிவித்தனா். சென்னையில் முக்கியச் சாலையிலிருந்த பிரபல திரையரங்கம் மூடப்படுவது, சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்கம் இருந்த இடத்தில் படப்பிடிப்பு அரங்கம் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.