குடியுரிமை திருத்த மசோதா எதிர்த்து சென்னையில் இன்று பேரணி! அனுமதியை ரத்து செய்தது சென்னை காவல்துறை

Must read

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இன்று சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சென்னை காவல்துறை ஏற்கனவே வழங்கிய அனுமதி திரும்ப பெற்றுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 3 மணி அளவில்  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பேரணி நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது காவல்துறை பேரணிக்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article