சென்னை:

ந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் மொத்தம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகில் 6,77,938 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் 1,46,319 குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 31,746 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். 87 பேர் சிகிச்சை பலன் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளது. தற்போது இரண்டு பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதிகளையும், எண்ணிக்கையும் சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் அரும்பாக்கம், புரைவாக்கம் உட்பட பிரிக்கப்பட்டுள்ள அண்ணாநகர் பகுதிக்குள்ளாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் உட்பட கோடம்பாக்கம் பகுதிக்குள்ளாக 5 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுதவிர போரூர் உட்பட வளசரவாக்கத்தில் 2 பேரும், தேனாம்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15-ஆம் தேதி மதிய நேரத்திற்கு பின் வந்து சென்றவர்கள், அனைவரும் தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள் என்றுசென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது.