சென்னை: தமிழக தலைநகரில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா தொற்று விகிதம் 3.6% என்பதாக உள்ளது. அதாவது, தீபாவளி முதற்கொண்டே, தொற்று விகிதம் 5% கீழே தொடர்ந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையானது, நோய் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது மற்றும் சென்னையில் மீண்டும் பரவல் தீவிரமடையாது என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நகர மக்கள், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில், மந்தை எதிர்ப்பு சக்தி என்ற நிலைக்கு அருகில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் பொது சுகாதார இயக்குநர் டாக்டர்.குழந்தைசாமி.
அவர் மேலும் கூறியதாவது, “இப்போதைய நிலையில், வைரஸ் தொற்றை வெளிப்படுத்தும் உடல்தன்மை மக்களுக்கு அதிகரித்திருக்கலாம். தொற்றுக்கான மூலம் கண்டறியப்பட்டு, அவர்களும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயின் பரவல் கட்டுப்படுத்தப்படும்” என்றார் அவர்.
தீபாவளி முதற்கொண்டு, சென்னையில், ஒருநாளில் பரிசோதனைக்கு உட்படுவோரின் எண்ணிக்கை 10000 என்பதாக உள்ளது.