சென்னை:
சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றுள்ள சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முதல்வர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலை கழகத்தின்யின் 165-வது பட்டமளிப்பு விழா சேப்பாக்கத்தில் உள்ள அதன் வளாகத்தில் இன்று நடந்து வருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் பங்கேற்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் விழாவில் மொத்தம் 762 பேர் பட்டம் பெறுகின்றனர்.
சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் என் வாழ்த்துக்கள்; டாக்டர்.ராதாகிருஷ்ணன், ராஜாஜி உள்ளிட்ட பலர் இங்கு படித்த மாணவர்கள்; மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் பெண்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்; சரோஜினி நாய்டு உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது;கலாச்சார ஆராய்ச்சியை மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது; சுப்பிரமணிய பாரதி சென்னது போல் மந்திரம் கற்போம் என்றார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் வந்திருப்பது பெருமைக்குரியது. ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம். பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலை.யில் தான் படித்தார், நானும் இந்த பல்கலை.யில் தான் படித்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற உங்களின் சீனியர் என்ற அடிப்படையில் நானும் இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.