சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த தகுதியான இடமாக சென்னை நகரம் உருவாகி வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக முதல் முறையாக இந்தியாவில் இரவு நேரத்தில் தீவுத்திடலைச் சுற்றி இரண்டு நாள் இரவு கார்கள் போட்டி போட்டு பறக்க இருக்கிறது.

ரேஸிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஆர்.பி.பி.எல். ) நிறுவனத்துடன் சேர்ந்து சென்னை பார்முலா ரேஸிங் சர்கியூட் இணைந்து டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் பார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸிங் போட்டியை நடத்த உள்ளது.

இதற்கான அறிவிப்பு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டாதுடன் இந்தப் போட்டிக்காக தமிழக அரசு ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக கூறினார்.

மக்களிடையே மோட்டார்ஸ்போர்ட்டுக்கான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த இந்த ஸ்ட்ரீட் ரேஸிங் உதவும் என்று இதனை ஏற்பாடு செய்த ஆர்.பி.பி.எல். நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தீவுத்திடலில் தொடங்கி போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் வழியாக 3.5 கி.மீ தூரம் நடைபெற இருக்கும் இந்த போட்டி சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.