அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், துரைப்பாக்கம், சென்னை
பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில் களின் நடை அடைக்கப் படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத் திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய் கின்றனர். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந் துள்ளது தலத்தின் சிறப்பு.
கிரகண பூஜை :
சூரிய, சந்திர கிரகணம் நிகழும் நேரம் தோஷ மானதாகக் கருதப் படுவதால், அவ் வேளையில் கோயிலை அடைத்து விடுவர். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத் திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய் கின்றனர். இது கிரகண கோயில் என்பதை உணர்த்தும் விதமாக முன் மண்டபத் திலுள்ள ஒரு தூணில், சூரிய, சந்திரரை ராகு, கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.
கல்விக்காக யாகம் : மேற்கு நோக்கி அமைந்த சிவத்தலம் இது. கோயில் விஜயநகர கட்டடக் கலை பாணியில் உள்ளது. அம்பாள் ஆனந்தவல்லி, முருகன் சன்னதி அடுத்தடுத்து உள்ளன. பவுர்ணமி யன்று மாலையில் பிரத்யங்கிரா, காயத்ரி மற்றும் சுதர்சன ஹோமம் நடக்கிறது. படிப்பு நன்றாக இருக்க விரும்புவோர் இதில் பங்கேற் கின்றனர்.
பாதை மாறிய ஆறு : ஒரு சமயம் பெருமழை பெய்யவே, கோயில் அருகிலுள்ள அடையாறில் வெள்ளம் பெருகி, ஊருக்குள் புகும் அபாயம் உண்டானது. இவ் வேளையில் கரையில் இருந்த கோயில் தேர், ஆற்றின் குறுக்கே விழுந்தது. இதனால், வெள்ளத்தின் திசை மாறி, மக்கள் காப்பாற்றப் பட்டனர். இவ்வாறு, இக்கட்டான சூழ்நிலை களில் பக்தர்களைக் காப்பவராக இங்குள்ள சிவன் அருளுகிறார்.
முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப் போக்கில் வழிபாடு நின்று, லிங்கம் மண்ணில் புதைந்து போனது, பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், இங்கு லிங்கம் இருப்பதை உணர்த் தினார். கைலாசநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது.