சென்னை:
சென்னையில் இருந்து புறநகர்களுக்கு செல்லம் ரயில் சேவையில் தென்னக புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது சென்னை செட்ரல்லில் இருந்து அரக்கோணம் வரையும், அதுபோல சென்ட்ரலில் இருந்து சூளுர்பேட்டை வரையும் புறநகர் ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல கடற்கரை முதல் வேளச்சேரி வரைபறக்கும் ரயில் சேவை மற்றும் கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்புர் வரை புறநகர் ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
முக்கியமான வழித்தடங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு வண்டியும், தூரமான இடங்களுக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டியும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பீக் அவர்ஸ் எனப்படும் நெரிசல் மிகுந்த நேரமான காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையொட்டி, சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த புதிய சேவை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துஉள்ளது.
சென்னை கோட்டத்தில் அரக் கோணம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு மொத்தம் 8 புதிய மின்சார ரயில்கள் வரும் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான நேரங்களில் 7 நிமிடங்களில் ஒரு மின்சார ரயில்சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில் இயக் கப்படும் மின்சார ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. அதன்படி, நூற்றுக் கணக்கான மின்சார ரயில்களின் சேவையில் 5 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரையில் நேரம் மாற்றியமைக்கப் பட்டது.
இதற்கிடையே, பயணி களின் தேவையை கருத்தில் கொண்டு மொத்தம் 8 புதிய மின்சார ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது 1-ம் தேதி முதல் நடை முறைக்கு வருகிறது.
அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப் படும் ரயில் சென்னை கடற் கரைக்கு காலை 7.30-க்கு வரும். சூலூர்பேட்டையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 7.20 மணிக்கு சென்ட் ரலை வந்தடையும். மறுமார்க்கமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப் படும் ரயில் இரவு 11.35 மணிக்கு சூலூர்பேட்டைக்கு செல்லும்.
இதேபோல், ஆவடியில் மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு மாலை 5.50-க்கு வரும். அதன்பிறகு இந்த ரயில் மாலை 6.35 மணிக்கு வேளச்சேரி செல்லும். இதேபோல், வேளச்சேரியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு இரவு 7.30 மணிக்கு வரும். பின்னர் இந்த ரயில் இரவு 8.30 மணிக்கு ஆவடியை சென்றடையும்.
சென்னை கடற்கரையில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5.35 மணிக்கு செங்கல்பட்டுக்கு செல்லும். இதே போல், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.39 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும்.
அரக்கோ ணத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரயில் திருமால் பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் வழியாக மதியம் 1.30 மணிக்கு செங்கல்பட்டுக்கு செல்லும். சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இனி பெண்களுக்கான 2 சிறப்பு ரயில்கள் விடப்படும். இதில், 6 பெட்டிகள் பொதுபெட்டிகளாக இயக்கப்படும்.
அதேபோல், அரக் கோணம் – வேளச்சேரி இடையே இயக்கப்படும் பெண்களுக்கான மின்சார சிறப்பு ரயலில் 5 பெட்டிகள் பொதுபெட்டிகளாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது