train
சென்னை,
சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரெயில்வே அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
ரத்து
சென்டிரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், பட்டாபிராம் ராணுவ குடியிருப்பு, திருத்தணி செல்லும் வழக்கமான ரெயில்கள் அனைத்தும் இன்று (13–ந்தேதி) முதல் 18–ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் 13–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை 14 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரெயில்கள்
இந்த வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த ரெயில்கள் புறப்படும் நேரம் மற்றும் இடம் பின்வருமாறு:–
செவ்வாய்க்கிழமை: மூர்மார்க்கெட் – ஆவடி காலை 9.35 மணி, மூர்மார்க்கெட் – திருவள்ளூர் இடையே அதிகாலை 4.10, 5.10, காலை 8.00, 9.00, 10.45, பகல் 12.00, 12.30, 2.20, மாலை 4.05, 5.50, இரவு 9.25, 10.35, 10.50 மணிக்கு மொத்தம் 13 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
மூர்மார்க்கெட் – அரக்கோணம் இடையே அதிகாலை 4.50, காலை 6.10, 7.30, 8.35, 11.25, பகல் 1.10, 2.55, மாலை 4.40 இரவு 7.35, 8.50, 10.00 மணிக்கு ஆகிய 11 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
மூர்மார்க்கெட் – திருத்தணி இடையே காலை 5.40, 6.50, 10.10, பகல் 1.45, 3.30 மாலை 5.15, 6.25, இரவு 7 மற்றும் 8.15 மணிக்கு இயக்கப்படுகிறது.
ஆவடி – மூர்மார்க்கெட்: அதிகாலை 3.40, 4.00 மணிக்கு ரெயில் இயக்கப்படுகிறது.
 
திருவள்ளூர் – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 4.00 5.45, 6.20 காலை 8.35, 9.40, 11.30, பகல் 1.15 மாலை 3.35, 6.35, இரவு 8.55 மணிக்கு மொத்தம் 10 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் ராணுவ குடியிருப்புக்கு 13–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நேரடி ரெயில் சேவை கிடையாது. அதற்கு பதிலாக ஆவடியில் இருந்து 1 மணி நேர இடைவெளியில் ஒரு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் நிற்காது.
அரக்கோணம்– திருப்பதி
13–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை அரக்கோணம் வரையிலான அதிவிரைவு ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும். திருப்பதி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக 13–ந் தேதி மற்றும் 17–ந் தேதி, 18–ந் தேதி ஆகிய 3 நாட்களும் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும். 14–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.
ஆவடி – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 3.45, 4.30, 5.20, 6.15 மாலை 6.05 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
திருவள்ளூர் – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 4.30, 5, காலை 6.50, 8.20, 8.50, 11.20, பகல் 12.20, 1.20, 2.40, மாலை 4.15, 5.50 இரவு 7.30, 9.00 மணி.
அரக்கோணம் – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 4.50, காலை 6.45, 8.00 மணி (வேலூரில் இருந்து புறப்படும்). 8.45, 9.45, 10.45, பகல் 12.15, 1.15, 2.20, மாலை 3.30, 5.05, இரவு 7.45, 8.15 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
திருத்தணி – மூர்மார்க்கெட் இடையே அதிகாலை 4.55, 5.40, காலை 6.40, 7 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும். மாலை 3 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும்.
மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் வழக்கமான ரெயில்கள் அனைத்தும் 13–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் 7–வது பிளாட்பாரத்தில் இருந்து 45 நிமிடத்துக்கு ஒரு ரெயில் வீதம் புறப்பட்டு செல்லும்.
பேசின்பிரிட்ஜ் – சூலூர்பேட்டை
பேசின் பிரிட்ஜ் – கும்மிடிப்பூண்டி இடையே நள்ளிரவு 12.25, அதிகாலை 5.40, 6.25, 6.55, காலை 7.30, 8.50, 9.10, 9.30, 10.40, 11.40, பகல் 1.25, 2.10, மாலை 3, 4.15, 4.45, 5.15, 6.10, 6.30, இரவு 7.45, 8.20, 9, 9.45, 10.15, 10.45 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பேசின்பிரிட்ஜ் – சூலூர்பேட்டை இடையே அதிகாலை 4.30, 5.30, காலை 8.00, 8.35, 10, பகல் 12.45, மாலை 3.45, 5.40, இரவு 7, 8.45 மணி.
கும்மிடிப்பூண்டி – பேசின்பிரிட்ஜ் இடையே அதிகாலை 2.45, 3.30, 4, 4.55, 5.20, காலை 6.25, 7.05, 7.20, 7.55, 8.10, 8.25, 8.55, 9.10, 9.50, 10.50, 11.50, பகல் 12.30, 12.35, 1.35, 2.00, 2.20, 2.45, மாலை 3.15, 3.40, 4.00, 4.30, 4.40, 5.00, 5.30, 6.00, 6.10, 6.45, இரவு 7.00, 7.15, 7.30, 8.10, 8.20, 8.35, 9.40, 10.05 மணிக்கு ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை–சூலூர்பேட்டை மற்றும் நெல்லூர் ரெயில் 13–ந் தேதி முதல் 16–ந் தேதி வரையும் மற்றும் 19–ந் தேதி முதல் 26–ந் தேதி வரையும் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.