சென்னை

சென்னையில் 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இன்று முதல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி இன்று முதல் சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையானது இதோ :

சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகிறது  இதன் காரணமக பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கடந்த 31.10.2017 முதல் 06.11.2017 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.  பள்ளிகள் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவிக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி மண்டல உதவி கல்வி அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (06.11.2017) ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.   அப்போது அனைத்து பள்ளிகளின் சுதாகாரம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் கீழ்க்கண்ட பள்ளிகள் தவிர

1.       பாலர் கல்வி நிலைய துவக்கப்பள்ளி, புரசைவாக்கம்

2.       பாலமந்திர் துவக்கப்பள்ளி, தி. நகர்

3.       ஏ. எம். சி. துவக்கப்பள்ளி, தி. நகர்

4.       கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம்

5.       டவுட்டன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி (ஆண்கள்), வேப்பேரி

6.       டவுட்டன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி (பெண்கள்), வேப்பேரி

7.       தியாகராய மேல்நிலைப்பள்ளி, ராயபுரம்

8.       அரசு மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி

9.       லேடி வெலிங்க்டன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி

மற்ற அனைத்துப் பள்ளிகளிலும், மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு சுகாதார வசதிக்ளுடன் பள்ளிகள் நடத்த உகந்த பாதுகாப்பான சூழல் உள்ளதாக கல்வி அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.  மேலும் வானிலை ஆய்வு மையம் மழைபொழிவு லேசான அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளதால் மேற்குறிப்பிட்ட 9 பள்ளிகளைத் தவிர சென்னை மாவடத்தில் இயங்கும் மற்ற அனைத்துப் பள்ளிகளும் இன்று (07.11.2017) முதல் வழக்கம் போல செயல்படத்துவங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியாளரால் அளிக்கப்பட்ட அறிவிப்பு மேற்கூறியவாறு தெரிவிக்கிறது.