சென்னையில் உள்ள தனியார் சி.பி.எஸ.சி. பள்ளி ஒன்றில் நடந்த பத்தாம் வகுப்பு திருப்பு தேர்வில் விவசாசிகளின் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக கேள்வி கேட்கபட்டுள்ளதோடு மாணவர்களை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிடும் விஷம பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது, இது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேளான் சட்டங்களுக்கு எதிராக மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர் இதற்கு உலகம் முழுக்க உள்ள பிற துறை சார்ந்தவர்களிடமும் ஆதரவு பெருகிவருதோடு இந்த கருத்து பதிவுகள் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான ஆயுதமாக மாறிவருகிறது.
விவசாயிகள் அளவில் மட்டுமே இருந்த போராட்டம் நாளுக்கு நாள் உலக அளவில் கவனத்தை ஈர்ப்பது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியதால் சமூக வலைதளங்களில் இது போன்ற கருத்தாயுதங்களை கையாள்வோரை மீது வழக்கு பதிந்து அவர்களுக்கு உதவி செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விவசாயிகளை வன்முறை வெறிபிடித்தவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.
தனது பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடந்த பயிற்சி தேர்வில் “தூண்டுதலின் பெயரால் சுயலாபத்துக்காக போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடும் வன்முறை வெறிபிடித்தவர்களின் செயலை கண்டித்து உங்கள் நகரின் பிரபல பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதுக” என்று கேள்வி கேட்கபட்டிருக்கிறது.
This is a sample fm a Class X English paper of a popular Chennai school. The incident and the much larger farm bills issue is still being discussed but here this is being said 'violent maniacs under external instigation' pic.twitter.com/N27ooheHJV
— T M Krishna (@tmkrishna) February 19, 2021
இதனை பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தை அனுகியபோது மாணவர்கள் தவிர யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதாக கூறினர், தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டபோதும் விளக்கம் எதுவும் தரப்படவில்லை.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் குறித்து மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.
இந்நிலையில், மாணவர்களை கேடயமாக பயன்படுத்தி விவசாயிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் விஷம பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சி.பி.எஸ்.சி. கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துவருகின்றனர்.