சென்னை
சென்னையில் ஒரு தனியார் பல்ளியில் பெற்றோருக்கு விடுமுறையில் நடந்துக்கொள்ள வேண்டிய முறை குறித்து வீட்டுப்பாடம் அளித்துள்ளது.
சென்னையில் உள்ள சிட்லபாக்கத்தில் அன்னை வொயலட் மேல்நிலைப் பள்ளி என்னும் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு சுற்றறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் பெற்றோர்கள் இந்த விடுமுறையில் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்கள் என கீழ்கண்டவற்றை குறிப்பிட்டுள்ளது.
தினந்தோறும் இருமுறை குழந்தைகளுடன் உணவருந்துங்கள். அவர்களிடம் விவசாயிகளின் கஷ்டத்தை கூறி உணவை வீணாக்கக் கூடாது என பழக்குங்கள்
குழந்தைகள் சாப்பிட்ட தட்டுக்களை அவர்களையே சுத்தம் செய்ய வைத்து உழைப்பாளிகளைப் பற்றி புரிய வையுங்கள்/
குழந்தைகளை நீங்கள் சமைக்கும் போது உதவ வையுங்கள். அவர்களிடம் பல சமையல் குறிப்புக்களைக் கூறிப் பழக்குங்கள்.
தினம் 5 புதிய ஆங்கில வார்த்தையைக் கற்பித்து அதை எழுதச் சொல்லுங்கள்
அக்கம் பக்கத்தினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுடன் பழகும் விதத்தை கற்பியுங்கள்
தாத்தா பாட்டியிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்களுடைய அன்பை உணர்வதும் நல்ல குணங்களை கற்பதும் குழந்தைகளுக்கு அவசியம் ஆகும். அவர்களுடன் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என வற்புறுத்துங்கள்.
உங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று குடும்பத்துக்காக நீங்கள் உழைப்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்
ஊரில் நடைபெறும் திருவிழாக்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்
குழந்தைகளை மரம் வளர்க்கப் பழக்குங்கள். மரங்கள், செடிகள் பற்றிய அறிவு குழந்தைகளின் வளர்ச்சிக்கு நன்கு உதவி செய்யும்
உங்கள் குடும்பத்தை பற்றியும் சிறுவயது சம்பவங்கள் பற்றியும் குழந்தைகளிடம் தெரிவியுங்கள்
என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.