சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, சென்னை, சேலம் மாநகராட்சியில்  உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பாமக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிடடு  வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி, அமமுக, தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. திமுக., அதிமுக கூட்டணிகளில் இன்னும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து,

சேலம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வட்டங்களிலும்  போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அடங்கிய முழு பட்டியலை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் , பா.ம.க. இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராமதாஸ் ஆகியோர்  ஒப்புதலுடன், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி  வெளியிட்டார்.

அதில் சேலம் மாநகராட்சிக்கான 42 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதனிடையே பாமக தலைவர் ஜி.கே. மணி, ” இந்த தேர்தல் பாமக கட்சிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமையும். இந்த தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது .புதுமுகம் , இளைஞர்கள், வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற 19ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் 200 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் மற்றும் மற்ற பகுதிகளின் பட்டியலும் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வேட்பாளர்கள் பட்டியல்:

மத்திய சென்னை கிழக்கு: பி.ரோகினி (வார்டு எண் 109), எஸ்.பி.பாலு (110), எம்.மஞ்சுளா (111), எஸ்.பவானி (112), பி.வசந்தி (113), ஏ.இளங்கோவன் (117), எஸ்.யோகலட்சுமி (118), முனியம்மாள் (58), பிரியா (61), வரலட்சுமி (77), வெல்டிங் சேகர் (78), ஆர்.எம்.சரவணன் (104), டி.அமுல் (107),

வடசென்னை மத்திய மாவட்டம்:  ஹேமலதா (34), உதயகுமார் (35), ஜே.எம்.ராம் குமார் (36), வெங்கடேஷ் (37), ரஞ்சனி வேலு (44), செல்வ ராஜ் (45), பாலாஜி (54), எம்.பி.ரமேஷ் (55), கே.தினகரன் (56), பிரபாகரன் (57), கே.எல்.ஷோபா (59), மணிகண்டன் (60),

வடசென்னை மேற்கு: எஸ்.எஸ்.முத்துக்குமார் (64), எம்.ஆமினா பானு (65), வசந்தி (66), கற்பகம் (67), ஈஸ்வரி (68), எம்.எஸ்.கரி முனிஷா (69), கோமளா (70), சத்தியமூர்த்தி (94), ஷீலா (95), லட்சுமி தேவி (96), ஷாமிலி (97), ஆலிஷ் (98), ஸ்ரீதரன் (104),

மத்திய சென்னை மேற்கு: பார்வதி (71), வனிதா மணி (72), குமரேசன் (73), சுப்புலட்சுமி (74), கற்பகம் (75), பரமேஸ்வரி (76), சரஸ்வதி (100), ரேணுகா (101), ராணியம்மாள் (102), வள்ளி (103), சங்கர நாராயணன் (105), வள்ளியம்மாள் (106), ஆனந்த பிரசாத் (107),

தென்சென்னை மேற்கு: சா.ஏழுமலை (130), ஜெஸிந்தா (131), பால ராணி (132), ஆறுமுகம் (133), பமிலா அய்யர் (134), பூபதி (141), ராஜா (127), குணசுந்தரி (128), ஜான்சி (129), சாந்தி (136), கிருஷ்ணகுமார் (137), ரவி (138)

தென்சென்னை கிழக்கு: சரளா பன்னீர்செல்வம் (122), தாரன்யா தேவி- ஜமுனா கேசவன் (123), நிர்மலா கலியபெருமாள் (171), மகேஸ்வரி துரை கோவிந்தராஜ் (124), சிவ அனுசியா (125), ஜெகதீஸ் வரன் ஜெயலட்சுமி (126), தேவராஜ் (62), மோகன காந்தி (63), ராமச்சந்திரன் (114), நந்தகுமார் (115), ஸ்ரீதர் (116), பானுமதி சதாசிவம் (119)

தென்சென்னை தெற்கு: பாலசுப்பிரமணியன் (139), ஆறுமுகம் (140), திவாகர் (142), சிவக்குமார் (168), சுரேஷ் (169), இந்திரன் (170), ஜனகன் (172), காயத்ரி (175), நயினார் (176), உதய குமார் (177), ஜனார்த்தனர் (178), அபிராமி ரமேஷ் (173), தனலட்சுமி இளங்கோ (174), கிரிஜா (179), உமா மகேஸ்வரி (180) கண்ணதாசன் (181), தணிகாசலம் (182), வேல்விழி (183), ஜோசுவா (184), பரமேஸ்வரி மணிகண்டன் (185), இந்திரன் (186), வள்ளி (188), திருஞானம் (189), மோகன் ராமன் (190), பிரேமா (191), நிர்மல் (192), ஜீவா (193), தவமணி (194), சந்துரு (195), தேவி (196), மதிஸ்ரீ (197), ரகு (198), நிர்மல் குமார் (199), சிவராமன் (200) கலா (83), கோபிநாத் (84), சித்ரா (87), புவனேஸ்வரி (88), சுப்புராஜ் (89), பாண்டுரங்கன் (90), ராஜேஸ்வரி (93), செல்லம்மாள் (79), கோட்டீஸ்வரன் (80), திரிபுர சுந்தரி (81), வெங்கடேசன் (82), விமலா (85), பாஸ்கர் (86) ராஜேஸ்வரி (93), கண்ணன் (92), சரவணன் (143), பால்சாமி (144), கோவிந்தராஜ் (145), குமர வேல் (146), தாமோதரன் (148), மேகலா (149), கல்பனா (150), உலக மோகன் (151), சுஜாதா (152), ஜீவா (153), வெங்கடேசன் (154), ரவி (155), சுமதி (147) குமரேசன் (156), மீனாட்சி வடிவேலு (157), விசாலாட்சி (158), கோபி (160), சுமதி (161), வெங்கடேசன் மண்ணு (162), சுந்தரி பாஸ்கர் (163), ரஜினி லியோ (164), சம்புராயன் (165), கிருஷ்ணகுமார் (166), நித்யா முருகேசன் (167).