திருச்சி:

மிழக முதல்வர் எடப்பாடியாருக்கு  காவிரி நீரை பெற்றுத்தருவதை விட 8 வழிச்சாலை திட்டத்தில்தான் ஆா்வம்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கினார்.

நடைபெற்று முடிந்த 17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை வெற்றிபெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றிருந்தனர்.  கூட்டத்தில் பேசிய திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தோழமை கட்சிகள் துணை நிற்க ஸ்டாலின் முதலமைச்சராக அரியணை ஏற உழைக்க காத்திருக்கிறோம். முதலமைச்சர் பதவி கனவில் இருந்தவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  ஆளும் கட்சிக்கு மக்களவைத் தோ்தலில் கொடுத்தது போன்று சட்டமன்றத் தோ்தலிலும் திமுக மரண அடி கொடுக்க வேண்டும் என்று  தொண்டர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.

இந்தி மொழி திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்க காரணமே, திமுக தான்.  என்றவர், ஏற்கனவே இருந்த அதிமுகவின்  37 எம்பிக்கள் கூனி குறுகி இருந்ததை போல நாங்கள் இருக்க மாட்டோம் என்றவர்,  நாடாளுமன்றம் கூடட்டும். எங்கள் செயல்பாடுகளை அங்கே பாருங்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 8 வருடமாக மேட்டூர் அணை திறப்பு இல்லை, ஜுன் 12ம்தேதி டெல்டா குறுவை சாகுபடிக்கு திறக்கவேண்டும் ஆனால், அதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரச எடுக்கவில்லை…. தண்ணீர் திறப்பது தொடர்பாக   தமிழக முதல்வர் கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்களிடம் பேசினாரா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், 8 வழிச்சாலை அமையும் என்று கூறி வருகிறார்.

8 வழிச்சாலை திட்டத்தில் 3 ஆயிரம் கோடி இலாபம் கிட்டும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு முதல்வர் அவசரம் காட்டுவதாக குற்றம் சாட்டியவர், இதற்கு காட்டும் அவசரத்தை ஏன் காவிரி நீரை பெற்றுத்தர காட்ட மறுக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுபிபினார்.

தமிழகத்தில் எடப்பாடி தலைமையில்  எடுபிடி ஆட்சி  நடைபெற்றுவருகிறது என்றவர்,  ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க முடியாத முதுகெலும்பு இல்லாத ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்று கடுமையாக சாடினார்.

தமிழகத்தில் பேரழிவு திட்டங்களுக்கு எதிராக 12ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட் டத்தில் திமுக பங்கேற்கும் என்றவர்,  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு  கொடுத்த இந்த மரண அடியிணை சட்டமன்றத் தேர்தலில் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.