சென்னை: சேலம் சென்னை 8வழிச்சாலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு பொதுமக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. முன்னதாக இன்று காலை வெளியான செய்தியில், 8வழிச்சாலை தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் நிலம் கையப்படுத்துதல் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி, தீர்ப்பில், எட்டுவழி சாலைக்கு இல்லை என்றும், தமிழகஅரசின் அரசாணைக்கு மட்டுமே தடை தொடரும் என்று அறிவித்துள்ளதுடன், 8வழிச்சாலை குறித்து புதிய திட்டம் தயாரித்து செயல்படுத்தலாம் என பச்சைக்கொடி காட்டியுள்ளது.
சேலம் சென்னை எட்டுவழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை விடுத்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் அரசாணையை தடை செய்து நீதிமன்றம் கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கின் விசாரணையின்போது, விசாரணையின் போது, இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்படுகிறது. எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை – சேலம், சென்னை – மதுரை இடையே செல்லும் போக்குவரத்துத் தொலைவு குறையும், இதனால் எரிபொருள் மிச்சப்படும் என்று திட்ட இயக்குநர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலத்தின் உரிமையாளர்களான பொதுமக்களின் கருத்தும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் மிகவும் முக்கியம் என்று கூறிய நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு விதித்த தடை தொடரும் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
தேவையான சுற்றுசூழல் அனுமதி பெற்று புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு எட்டுவழிசாலை பணிகளை தொடரலாம்
புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது
மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.
புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம்.
உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாக தொடங்கலாம்.
நெடுச்சாலை அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறவேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எட்டுவழிசாலை தடை செய்யப்பட்டதாக எண்ணி கொண்டாடிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.