சென்னை:
தமிழகத்தில் பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் அதிகப்பட்சமாக இதுவரை 101.6 மி.மீ. மழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்துள்ளதாக ஸ்கைமெட் தனியார் வானிலை நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இந்த ஆண்டு சென்னையில் அதிகபட்ச மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை நிறுவனம், தற்போதைய சாதனையை விட அதிகமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஸ்கைமெட் வானிலை ஆன்லைன் பதிவில் தெரிவித்துள்ளது.
ஓரிரு நாள் மந்த நிலைக்கு பிறகு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்றும்,
அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று என்று வானிலை மையம் கணித்துள்ள நிலையில், பகல்நேர வெப்பநிலை அதிகபட்சம் 32 சி ஆக உயரக்கூடும், குறைந்தபட்சம் 25 சி வரை இருக்கும் என்றும் கூறி உள்ளது.
தென்கிழக்கு அரேபிய கடலில் காற்றும் ஈரப்பதமும் குறைந்த அழுத்தப் பகுதியை உருவாக்கும் என்றும், இது அக்டோபர் 20 ம் தேதி தீவிரமடைய வாய்ப்புள்ளது. அடுத்த வாரத்திற்குள், தமிழ்நாட்டிலிருந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போதைய மழைய விட அதிக மழை கொட்டும் வாய்ப்பு உள்ளதாக ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இந்த மாதம் இதுவரை (அக்டோபர்) சென்னையின் சராசரி மழைப்பொழிவு 315.6 மி.மீ என்றும், நுங்கம்பாக்கம் ஆய்வகத்தில் 101.6 மிமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளதுடன், இது கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை என்றும் குறிப்பிட்டு உள்ளது.
கடந்த 2015 அக்டோபர் 16 அன்று 246.5 மிமீ, 2017 ம் ஆண்டு அக்டோபர் 3,ந்தேதி அன்று 182.7 மிமீ மற்றும் அக்டோபர் 5, 2009 அன்று 150 மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது.