சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மாலை 4:30 மணிக்கு துவங்கிய மழை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், சென்னையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி தருவதோடு வாகனங்கள் சேற்றில் இறங்கலாம் செல்ல வேண்டியுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓ.எம்.ஆர். சாலை, தரமணி, ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
[youtube-feed feed=1]