சென்னை:
இன்று நடைபெற்ற அதிரடி வருமான வரித்துறை சோதனையில் 90 கோடி ரூபாய் பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 8ந்தேதி இரவு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் கோடிக்கணக்கில் ரொக்கமாக கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள்.
தனையடுத்து புதிய பணம் மாற்றவும், பணம் எடுக்கவும், பணம் டெபாசிட் செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தையும், கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் தடுக்கும்வகையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில், உயர்வகுப்பினர் அதிகம் வசிக்கும் அண்ணாநகர், தி.நகர் உள்பட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். பல தொழிலதிபர்களின் வீடுகளில் நடத்தப்பட்டது. அகிருந்து புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக சிக்கியது.
90 கோடி ரொக்கப்பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் 70 கோடி புதிய ரூபாய் நோட்டுக்கள் எனறும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சாமானிய மக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் இன்று வரை கிடைக்காமல் அவதியுறும் வேளையில், பண முதலைகளுக்கு இவ்வளவு புதிய நோட்டுக்கள் கிடைப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது.