சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து 57 பேரை பலிவாங்கிய அரசியல் பிரமுகர் கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலை சென்னை மாதவரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன்மூலம் கைது எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து, அடுத்தடுத்து பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கள்ளச்சாராயம் கடந்த 3 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருவதால், இதை திமுக பிரமுர் கண்ணுக்குட்டி என்பவர் அரசியல் பலத்துடன் விற்பனை செய்து வந்தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன நிலையில், 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கள்ளச்சாராயத்தில் பயன்படுத்திய மெத்தனால் எனப்படும் வேதிபொருள் சென்னையில் வாங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் மாதவரம் பகுதியில் செயல்பட்டும்
கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன நிலையில், 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 12 பேர் கண் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட விஷப்பொருளான மெத்தனால், சென்னையில் உள்ள பிரபல ஆலை ஒன்றில் வாங்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஆலையானது மாதவரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு விசாரணை நடத்திய காவல்துறையினர், சட்டவிரோதமாக கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் விற்பனை செய்த விவகாரத்தில், அஆலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.