பதறவைக்கும் பார்க்கிங் ‘குண்டு’. சென்னைவாசிகளுக்கு இப்படியும் சோதனை..
ஊரடங்கின் போது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த வாகனங்கள் அங்குதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
‘’ அவர்களிடம் ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்’’ என்று கட்டணம் வசூல் செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் கோயம்பேடு தவிர தாம்பரம், பிராட்வே , எழும்பூர், மாம்பலம் உள்ளிட்ட பஸ் மற்றும் ரயில் நிலையங்களிலும் இது போல் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டுச்சென்றுள்ளனர்.
வாகனங்களை அவர்கள் நிறுத்தி இரு மாதங்கள் நெருங்குகிறது.
ஊரடங்கு முடிந்து அந்த வாகனங்களை எடுக்க வேண்டுமானால், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆயிரத்து 500 ரூபாய் வரை, கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு சக்கர வாகன ஓட்டுகளிடம் எவ்வளவு வசூலிக்கப்படும் என்பது தெரியவில்லை.
– ஏழுமலை வெங்கடேசன்