சென்னை:  வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கான பணிகள் 95 சதவிதித்திற்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்த அடுத்த மாதம் (நவம்பர்) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.

 சென்னையில்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பேருந்துகளை விட மின்சார ரயில்,  பறக்கும் ரயில் மெட்ரோ ரயில் போன்ற ரயில் சேவைகள் பெரும்பங்காற்றி வருகிறது. சாலை போக்குவரத்தில் ஏற்படும் சிரமங்களை  தவிர்க்க அனைத்து தரப்பினரும், ரயில் சேவைகளை அதிக அளவில் விரும்பு பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில்,   பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு பணி நடெபற்றது.  முதல்கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்வ பணிகள் முடிவடைந்து ரயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  இரண்டாவது  கட்டமாக மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரயிலை, கடற்கரை டூ தாம்பரம் செல்லும் ரயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில், வேளச்சேரி டூ  பரங்கி மலை ரயில்வே லைன் அமைக்கும் பணி  கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் தொடங்கியது. சுமார்   5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த இடத்தை கடக்க 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆனபால்,  ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனால் ஆதம்பாக்கம் -பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது.  ஆரம்பத்தில் ரூ.495 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தற்போது ரூ.734 கோடிக்கு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த ரயில் பாதை கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமைகிறது. இத்திட்டத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன.  ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியின் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே 250 மீட்டர் தூரத்திற்கு 28 தாங்கும் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 36 தாங்கும் பாலங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது பணிகள் முவடிடைந்த  நிலையில் வரும் நவம்பர் மாதம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட உள்ளதாக அதிகாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய ரயில்வே அதிகாரிகள்  வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என  தெரிவித்துள்ளனர்.