சென்னை

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னைக்குப் பெரிய வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

அதையொட்டி பெரிய வெங்காய விலை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை ஆகிறது.