கொரோனாவை வீழ்த்திய 97 வயது முதியவர்..

வயதானவர்களை கொரோனா தாக்கினால் மீள்வது கடினம் என மருத்துவம் உலகம் சொல்லி வரும் நிலையில், 97 வயது முதியவர் ஒருவர் அந்த நோயில் இருந்து விடுபட்டு, டாக்டர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அந்த முதியவரின் பெயர், கிருஷ்ணமூர்த்தி.
மருத்துவ புத்தகத்தில் காணப்படும் அநேக நோய்களை உடலில் வைத்திருந்த கிருஷ்ணமூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த 30 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
புரதச் சத்துக்கள் நிறைந்த சைவ உணவு கொடுக்கப்பட்டது.
சில தினங்களில் தானாகவே சுவாசிக்க ஆரம்பித்தார்.
மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கிருஷ்ணமூர்த்திக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்தது.
பூரணமாகக் குணம் அடைந்து வீடு, திரும்பி உள்ளார், அந்த முதியவர்.
[youtube-feed feed=1]