
சென்னை.
பரபரப்பாக உள்ள சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி அருகில் உள்ள மின்சார பெட்டியில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பிடித்து எரிய தொடங்கியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எஸ்.பி.ஐ வங்கி அருகே உள்ள மின்சார பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Patrikai.com official YouTube Channel