சென்னை:
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த தொழிற்சாலையை நடத்த முன்வந்திருக்கிறது.
வரி ஏய்ப்பு பிரிச்சனை காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையை சில வருடங்களாக மூடிக் கிடக்கிறது. இந்த ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஃபாக்ஸ்கான் மற்றும் நோக்கியா நிறுவனம் இணைந்து முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டசபையில் தமிழக தொழிற்துறை அமைச்சர் பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
இதற்காக பின்லாந்து நிறுவனமான நோக்கியா, மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தில் வரி ஏய்ப்பில் தள்ளுபடிகள் பெற்று பிரச்சனையை சுமுகமாக முடிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து அரசிடம் பேச்சு வார்த்தை நடந்த போது, ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியா ஆலையை குளோபல் மொபைல் போன் தயாரிக்கும் மையமாக மாற்ற இருப்பதாகவும் மேலும் தொலைத் தொடர்பு உபகரணங்கள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதே நேரம் இதில் நோக்கியா நிறுவனமும் கூட்டாக இணைந்து செயல்படும் என்று கூறப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய ஒப்பந்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இதற்காகச் சிறப்பு பொருளாதார மண்டலம் வேண்டும் என்றும் இங்குத் தயாரிக்கும் சாதனங்களை இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவிலும் ஏற்றுமதி செய்ய இருப்பதால் இலவசமாக இடம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக தனது நிறுவனத்தில் இருந்து விற்பனையாகும் ஒவ்வொரு போனிற்கும் இவ்வளவு என்ற பெயரில் அரசாங்கத்திற்கு இந்நிறுவனம் கட்டணமாக செலுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த முயற்சி வெற்றி அடைந்தால் ஆண்டுக்கும் 100 மில்லியன் போன்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
5 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் முன்வந்துள்ளது, மேலும் அதற்காகத் தமிழக அரசை அணுகி தொழிலாளர் பிரச்சனை கையாள்வது மற்றும் ஆலையின் மாநில பயன்பாடு பற்றி பேச்சு வரத்தை நடத்தி உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு ஃபாக்ஸ்கான் தலைவரும் நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் இது குறித்து பேசிக் கொண்டதாகவும் அதில் இருவருக்கும் ஆர்வம் உள்ளதாகவும் அதனால் தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் ஆதரவு வேண்டும் என்றும் முடிவுசெய்துள்ளனர் என்று செப்டம்பர் 22 ஆம் தேதி ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஃபாக்ஸ்கான் மற்றும் நோக்கியா நிறுவனம் இணைந்து செயல்படுவதினால் இந்தியாவிற்கு நிறைய வணிகத்தைக் கொண்டு வர முடியும் என்றும் இந்தியாவை உலகளாவிய மொபைல் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் மையமாக மாற்ற முடியும் என்றும் தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தயாரிப்பு பணியைத் துவங்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைக்காக துறை சார்ந்த நிபுணர்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் டெர்ரி கொவுவை தைவானில் இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாக இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஐடி மற்றும் மின்னணு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கேட்டபோது தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தைத் தொடர்பு கோண்ட போது பதில் ஏதும் அளிக்கவில்லை, நோக்கியா நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட போது அவர்களும் பதில் அளிக்க மறுத்தனர்.
ஆனால் இந்திய அரசால் முடக்கப்பட்டுள்ள அந்த ஆலையை விற்க நல்ல விலைக்கு வாங்குபவரைத் தேடிவருவதாக மட்டும் தெரிவித்தனர்.
சென்னை அருகில் ஸ்ரீபெரும்புதூரில் செயலப்ட்டு வந்த நோக்கியா ஆலை 2014 ஆம் ஆண்டு 21,000 கோடி வரி ஏய்ப்பு செய்த காரணத்திற்காக இழுத்து மூடப்பட்டது.
இதனால் 12,000 ஊழியர்கள் வெலை இழந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் நோக்கியாவின் சென்னை ஆலையை தவிற பிற உலகளாவிய போன் தயாரிப்பு பிரிவுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டாலர் தொகைக்கு கைப்பற்றியது குறிப்பிடதக்கது.
இதற்கான பேச்சுவார்த்தை ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஜூன் மாதம் முதல் நடைப்பெற்று வருகிறது.
அதில் நோக்கியா மீதான வரி ஏய்ப்பு பிரச்சனை ஃபாக்ஸ்கான நிறுவனத்தை பாதிக்க கூடாது என்றும், நோக்கியாவின் வரி ஏய்ப்பை தங்கள் நிறுவனத்தை செலுத்த அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் இந்நிறுவனத்தில் இருந்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நோக்கியா மீதான வரி ஏய்ப்பில் இருந்து அவர்களுக்கு சலுகை அளித்து இப்பிரச்சனையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நோக்கியா நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் ஓரகடத்தில் உள்ள ஆலையில் மொபைல் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரித்து வந்தது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் போன் மற்றும் தொலைக்காட்சிகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் மாநில அரசிடம் இருந்து தடை இல்லா மின்சாரம் மற்றும் முன்னால் நோக்கியா ஊழியர்களில் திறமை உள்ளவர்களை எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக உறுதி அளித்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் 10 ஆண்டிற்கு மானியம் அல்லது ஆண்டிற்கு 10 மில்லியன் டாலர் வரை ஆராய்ச்சிக்கான செலவினம் அளிக்கவும் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Credit: www.goodreturns.in