சென்னை: இசிஆர் விரிவாக்க பணிக்கு தமிழகஅரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி  உள்ளது. இதையடுத்து, 105 கிமீ ECR விரிவாக்கப் பணி  விரைவில் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு நாளும் 14,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் இசிஆர் சாலையை விரிவாக்கம் செய்வதில் தமிழக அரசு ஆர்வம் காட்டாத நிலையில், அந்த திட்டத்தை கைவிடுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை பாதையை விரிவுபடுத்தும் திட்டத்தை ரத்து செய்வதாகத் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு’ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாமக தலைவர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  ஏப்ரல் 8 ஆம் தேதிஇசிஆர் சாலை விரிவாக்கத்துக்கு தமிழகஅரசு  தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்கியது. இதையடுத்து, அந்த சாலை விரிவாக்கப்பணி விரைவில் தொடங்கம் என  அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலையின் (ECR) 105 கிமீ பாதையை’ நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பிராந்திய அதிகாரி எஸ்பி சோமசேகர், இசிஆரை பராமரிக்கும் ஏஜென்சியான தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம், தேவையான நிலத்தை ஒப்படைத்ததற்காக ரூ.222 கோடி இழப்பீடு கேட்டது. மேலும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3,000 கோடி அனுமதிக்கப்பட்டிருந்தும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணம் தர மறுத்ததால், சாலைப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இசிஆரை கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்துக்கு பணம் தேவை. மேலும் இந்த பாதையில் உள்ள சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஒப்படைக்கப்பட்டதால் இழந்த வருவாய்க்கு அது இழப்பீடு கோரியது. இதனால்’ இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாகத் தமிழக தலைமைச் செயலாளர் வி.இறையன்புவுக்கு’ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியது.

இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் தீரஜ் குமாருர் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  இதையடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் சோமசேகர் தெரிவித்துள்ளார்.