சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படடப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 8 பேர் காவல்நிலையத்தில் சரணமடைந்து உள்ளனர். இதன் காரணமாக பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கொலை வழக்கில், ஆற்காடு பாலு என்பவர் உள்ளிட்ட 8 பேர் போலீசில் சரணமடைந்து உள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறை மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை 6.30 மணி அளவில் மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் பகீரங்கமாக 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளார். ஆம்ஸ்ட்ராங் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, போதைபொருள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட ஏராளமான வழக்குகள் இருந்து வந்த நிலையில், பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கெத்தாக தனது பகுதியில் வலம் வந்துகொண்டிருநததார். இதையடுத்து, தான் வசித்து வந்த பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் பிரமாண்டமான வீடு கட்டி வருகிறார். இதனால், தற்காலிகமாக அவர் அயனாவரம் பகுதியில் வசித்து வருகிறார். இருந்தாலும் தினசரி மாலை வேளையில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டை வந்து பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை கவனித்து வந்த கொலை கும்பல், நேற்று மாலை வேணுகோபால் தெருக்கு வந்து வீட்டை பார்த்து விட்டு திரும்பிய ஆம்ஸ்ட்ராங்கை அந்த பகுதியில் வைத்தே சரமாரியாக வெட்டி வீசியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரம்பூர், கொளத்தூர், ஓட்டேரி பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங், கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் போலீசில் சரண்டைந்துள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆற்காடு சுரேஷின் சகோதரர் இந்த கொலையில் தொடர்பில் இருப்பதால், தனிப்பட்ட பகை காரணமாக து நடந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
சென்னையில் ஒரு தேசிய கட்சியின் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல கொலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து காவல்துறையில் புகார் அளிப்பவர்களும் கொல்லப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நாசகார செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறையும், திமுக அரசும், மவுனமாக வேடிக்கை பார்த்துகொண்டிருப்பது. இது தமிழ்நாட்டின் சாபக்கேடாக பார்க்கப்படுகிறது.