சென்னை: குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி மாணவர்கள் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி யாகியுள்ளது. இதில் பலருக்கு ஒமிக்ரான் அறிகுறியும் காணப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மட்டுமின்றி ஒமிக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், பொதுமக்கள் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்துகளிலும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு தங்கியிருந்து படித்து வரும், 1417 மாணவர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டழ, அடிடவஇ 80 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, விடுதி மூடப்பட்டு, தொற்று உறுதியானவர்கள் மட்டும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.மற்றவர்கள், அவரவர் வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லுாரியில் நேரடி வகுப்பு நிறுத்தப்பட்டு, ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்படுகின்றன.