சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.100 கட்டண டிக்கெட் எடுத்தால், அன்றைய தினம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் * தினசரி பாஸ் (Daily Pass)* என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே தற்போது, அதுகுறித்து விரிவான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரூ.100 கட்டணச் சீட்டு எடுத்தால்,  காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வேண்டுமானாலும் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால்,  இந்த ‘தினசரி பாஸ் (Daily Pass)’-ஐ மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் *₹ 150* ரூபாய் செலுத்துவதன் மூலம் பெறலாம். இதைக்கொண்டு ஒரு நாள் முழுவதும் சுற்றிவிட்டு அதைத் திருப்பி அளித்தால் *₹ 50* ரூபாய் திருப்பி அளிக்கப்படும். இதுமட்டுமின்றி, இந்த டிக்கெட்டை வாங்கிய பயணிதான் உபயோகப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேறு யார் வேண்டுமானாலும்  உபயோகப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டமாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், சமீப காலமாக பணிகளிடையே இந்த தினசரி ‘பாஸ்’ க்கு வரவேற்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும் சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 42 ரெயில்கள் இயக்கப்படுவதாகவும், அலுவலக நேரங்களில் காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும், மற்ற சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது என்று கூறினார்.

பயணிகளில், 30 சதவீதம் பேர் செல்போன் உதவியுடன் ‘கியூ-ஆர் கோடு’ முறையிலும், 70 சதவீதம் பேர் பயண அட்டையும், சிலர் டோக்கன் முறைகளையும் பெற்று பயணம் செய்கின்றனர். இதற்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்த ரூ.100 தினசரி பாஸ் திட்டம்,  கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதாதால் தற்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.100 பயண கட்டணச்சிட்டை பயணத்தை தொடங்கும் எந்த ரயில் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும்,  காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் சென்று வரலாம். கடைசி பயணத்தை முடிக்கும் ரெயில் நிலைய கவுண்டரில் பயண அட்டையை திருப்பி கொடுத்து ரூ.50-யை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றதுடன்,  இந்த சலுகைகளை,  அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கொரியர் நிறுவனத்தினர் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் இந்த திட்டத்தை அதிகம் ஊக்குவித்து வருகிறது என்றும் தெரிவத்தனர்.