காட்பாடி

ந்திய ரெயில்வே சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி ரெயில் இனி  காட்பாடியில் நின்று செல்லும் என அறிவித்துள்ளதை அடுத்து நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து கோவைகு சதாப்தி விரைவு ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகின்றது.  ஆனால் அந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படாமல் இருந்தது.   இங்குள்ள ரெயில் பயணிகள் இந்த ரெயில் காட்பாடி நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வெகு நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஏற்ற இந்திய ரெயில்வே இனி இந்த ரெயில் காட்பாடி நிலையத்தில் நின்று   செல்லும் என அறிவித்துள்ளது.     நேற்று காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் சதாப்தி விரைவு ரெயிலுக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பி துறை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

சென்னை கோவை சதாப்தி விரைவு ரெயில் இனி தினமும் காலை 8.53க்கு காட்பாடி ரெயில் நிலையம் வந்தடைந்து அங்கிருந்து காலை 8.54 க்கு கோவை நோக்கி புறப்படும்.    அதே போல இரவு 8.14 மணிக்கு வந்து இரவு 8.15 மணிக்கு சென்னையை நோக்கி புறப்படும்.   இது சோதனை ஒட்டமாக ஆறு மாதங்கள் ஓட்டப்பட்டு பின்பு நிரந்தரமாக்கப்பட உள்ளது.