சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சி வரும் 30-ந்தேதி தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் 48-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ந்தேதி தொடங்க உள்ளது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனம், பிற மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. அரசின் திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலுமதனியார் துறை அரங்குகளும், வர்த்ததக அரங்குகளும் இடம்பெறுகின்றன.
.இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்படவுள்ளது பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், ராட்டினம் , பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், தின்பண்டங்கள், ஓட்டல்கள் ஏராளம் இடம் பெறுகின்றன. போன்ற சிறப்பு அம்சங்களும் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருட்காட்சியை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.