டில்லி:

ந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை என்று  தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது.

தேசிய குற்ற ஆவன காப்பகம் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகள் திருமணம் போன்ற சமூக பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி,  சென்னையில் 1 லட்சம் பெண்களில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று  தெரிவித்து, பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் சென்னை என்று   தெரிவித்து உள்ளது.

சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்கள் வருமாறு:- அதில், இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. அதேபோல குழந்தைகளுக்கும், மிக பாதுகாப்பான பெருநகரமாக சென்னை விளங்குகிறது.

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மிக குறைந்த அளவான பொருளாதார குற்றங்களே சென்னையில் நிகழ்ந்துள்ளது என்றும், கணினி வழி குற்றங்களும் சென்னையில் மிக குறைந்த அளவே நடந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.

அதுபோல,  இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் கொடூரமான குற்றங்கள் மிக குறைந்த அளவே சென்னையில் நடந்துள்ளதாக வும்,  பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே நிகழ்ந்து இருக்கின்றன என்றும் தெரிவித்து உள்ளது.