சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, வரும் 3ந்தேதி இரவு இயக்கப்பட இருந்த சென்னை-ஹவுரா ரெயில் ரத்து செய்யப்படுவதாக  தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல், சென்னை மசூலிப்பட்டணம் அருகே 4ந்தேதி மாலை கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பராமரிப்பு பணி காரணமாக, சென்னை-ஹவுரா ரெயில் 3ந்தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரயில்வே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆந்திர மாநிலம் பலாசா – விசாகப்பட்டினம் மற்றும் ராயகடா – விஜயநகரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற 3-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-12839) ரத்து செய்யப்படுகிறது.

அதே தேதியில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12840) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.