சென்னை,

சீமை கருவேல மரங்களை அகற்றும் வழக்கு இன்று தலைமை நீதிபதி பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஆராய 12  பேர் கொண்ட குழு அமைக்கவும், மேலும் இந்த வழக்கை  3 நீதிபதி அமர்வு வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவின் காரணமாக தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து, மேகநாதன் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு காரணமாக, சென்னை ஐகோர்ட்டு சீமை  கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், அறிவியல் பூர்வமாக கருவேல மரங்களை அகற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு  தலைமை நிதிபதி தலைமயில் 3 நீதிபதி அமர்வு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுளளது. மேலும், சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து ஐஐடி பேராசிரியர், வன அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவினர் இதுகுறித்து ஆராய்ந்து ஜூன் 5-க்குள் வன அதிகாரிகள் 12 பேர் குழு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.