சென்னை,

மிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் விநியோகிக்கப்படும் மதுபானங்களின் தரம் குறித்து சோதனை நடத்த ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அரசு நிர்வகித்து வரும்  டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தரமற்ற மற்றும் கலப்பட மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட வருவதாகவும்,  இந்த மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை மண்ணடியை  சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, நீதிமன்றம், டாஸ்மாக்கில் கடைகளில்  விநியோகிக்கப்படும் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும்,  ஆலைக்கே நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வின் முடிவு குறித்து வரும் 22ந்தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு  ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.