ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை

Must read

சென்னை:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்து ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்  ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டு இன்று 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது,
highcourt
அதனை தொடர்ந்து ராம்குமாரின் வழக்கறிஞரான சங்கர சுப்பு நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் மதியம் 2.15 மணி வரை ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

More articles

Latest article