சென்னை:
ழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது நியாயமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார்.
download (3)
கடந்த சில நாட்களுக்கு முன்  வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து சென்னை ஐகோர்ட் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இது தங்களை பாதிக்கும் என்பாதால்  திரும்ப பெற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.  மேலும் தலைமை நீதிபதியை சந்தித்து தங்களது கருத்தை வலியுறுத்தினர். அப்போது,  இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தலைமை நீதிபதி கூறினார். இதனை ஏற்காத வழக்கறிஞர்கள், சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறுகையில்வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு காரணமாக, நீதிமன்ற பணிகளில் பாதிப்பில்லை. புதிய சட்ட திருத்தத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. உச்சநீதிமன்ற  வழிகாட்டுதல்படி புதிய சட்ட திருத்த விதி செயல்படுத்தப்படுகிறது. சட்டதிருத்த ஆய்வுக்கான குழுவில் கருத்துக்களை தெரிவிக்காமல் போராட்டம் நடத்துவதில் நியாயமில்லை” என்று எஸ்.கே. கவுல் தெரிவித்தார்.