சென்னை: பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

பா.ஜ., ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர் கே.சாமி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும்  பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அவதூறாக பல பதிவுகளை தனது யுடியூப் வலைதளத்தில்  பதிவிட்டு வந்தார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கிஷோர் கே.சாமியை 3 வழக்குகளில் கைது செய்து, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து, கிஷோர் கே.சாமி மீது,
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சினார்.

காவல்துறையின் குண்டர் சண்டைத்தை  எதிர்த்து கிஷோர் கே.சாமி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று   கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.