சென்னை: பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு கொண்டு போக பேரவையில் திமுக உறுப்பினர்கள் குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர். ஆகையால் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது  சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.

அதனை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் சென்னைய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்ததை எதிர்த்து பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.