சென்னை: பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பு,கவுதமி, நமீதா, காயத்ரி குறித்து அருவறுக்கத்தக்க வகையில் பேசிய  திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் அவர்கள் 4 பேரிடமும் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டு உள்ளதுடன், இனிமேல் இது போல் பேசமாட்டேன் என்று பிராமண பத்திரம் தாக்கல் செய்யவும் சைதை சாதிக்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக்  பாஜக நிர்வாகிகளும் நடிகைகளும் ஆன குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் பற்றி அவதூறான கருத்துக்களை மிகவும் ஆபாசமாக பேசினார். அதை அமைச்சர் சிரித்து வரவேற்றார். இதற்கு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சாதிக் மீது புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்த சம்பவத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி மட்டுமே வருத்தம் தெரிவித்த நிலையில், திமுக சார்பில் எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, பாஜக சம்பந்தப்பட்ட சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தின. இதனால் வேறுவழியின்றி காவல்துறையினர்,  அடுத்து சைதை சாதிக் மீது  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சைதை சாதிக் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாதிக், ண்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை பேசியிருக்கிறார். அதற்கான ஆவனங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  அதனால் இனிமேல் இதுபோல் பேச மாட்டேன் என்று அவர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,  சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், அதுவரை அதுவரைக்கும் சைதை சாதிக்கை போலீசார் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.