சென்னை

மிழக அரசுக்கு ஊழல் புரியும் அரசு அதிகாரிகள் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

குற்றப்பிரிவு காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் தரப்பில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கி விட்டதால், தற்போது இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த சொத்து விவரங்களை ஆய்வு செய்து, அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.