சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத முடியாது என உத்தரவிட்டுள்ளது

கல்லூரி மாணவர் ஒருவர் வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,
”வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும் ஏற்கனவே கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வருகைப் பதிவு குறைவாக இருக்கும் கல்லூரி மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல. உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர மாணவர் விரும்பினால் பல்கலைக் கழகங்கள்அனுமதி அளிக்கலாம், மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது:
என உத்தரவிட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]