சென்னை

டார்ச் லைட் சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பதிலை கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்க்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.  இந்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் அக்கட்சிக்கு அதே சின்னம் தேவை என கோரிக்கை விடப்பட்டது.   ஆனால் தேர்தல் ஆணையம் பதிவு மூப்பு அடைபடையில் எம் ஜி ஆர் மக்கள் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கியது.  எனவே டார்ச் லைட் சின்னம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மகக்ள் நீதி மய்யம் வழக்கு மனு தாக்கல் செய்துள்ளஹ்து.

அந்த மனுவில் ”மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.  எங்கள் கட்சி அந்த சின்னத்தை முன்னிலைப்படுத்தி மக்களை சந்தித்து வந்தது. இனி வரவுள்ள பொதுத் தேர்தல்களில் புதுச்சேரிக்கு மட்டும் மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.   ஆகவே, தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரிடார்ச் லைட் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டது.,.

இந்த மனுவை நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நக்கீரன் ஆகியோர் அமர்வு விசாரித்த்து.  அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதர், ”அரச்நின் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு குறைந்தபட்சம் 2 தேர்தல்களில் பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும்.

அந்த வகையில் கடந்த மக்களவை தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கபட்டது” என வாதாடினார்.  இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமான பதிலளிக்க உத்தரவிட்ட அமர்வு விசாரணையை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துல்ளது..