சென்னை

ற்கனவே புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கப் பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் தேதி கடந்த 22 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அப்போது புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்த மற்றும் பட்டியலினத்தோருக்கு சுழற்சி இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஒப்புக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவு இட்டது.  இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.   இந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கப் பிறப்பிக்கப்பட உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது

மேலும் உயர்நீதிமன்றம், ”புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குளறுபடிகள் சரி செய்யும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.  அதே வேளையில் உள்ளாட்சித் தேர்தலை நிரந்தரமாகத் தள்ளிப்போட முடியாது.” எனத் தெரிவித்துள்ளது.  புதுச்சேரி தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை நடத்திய பிறகுதான் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியும் என அறிவித்துள்ளது.